நகை, பணத்துடன் கைப்பையை திருடிய 2 பெண்கள் கைது
திருச்சி நாகமங்கலம் நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் அம்பிகா ( 22 ) . இவர் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் இருந்து நாகமங்கலம் செல்ல விராலிமலை வழியாக செல்லும் பஸ்சில் இடம் பிடிக்க தன் கைப்பையை பஸ்சுக்குள் வைத்தார். பின்னர் பஸ்ஸில் ஏறி பார்த்தபோது தன் கைப்பை திருட்டு போனது தெரிந்தது. அதில் 4 கிராம் மதிப்புள்ள தங்கதோடுகள் மற்றும் பணம் இருந்தது. இதுகுறித்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவிகளான லட்சுமி பிரியா ( 35 ) மற்றும் சத்யா (30 ) ஆகிய 2 பெண்களை கைது செய்தனர் .
ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் மயங்கி விழுந்து சாவு
திருச்சி கல்கண்டார்கோட்டை ஆலத்தூர் சேர்ந்தவர் ராய் ஜோஷ் சுமிதாஸ் (72). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று பொன்மலைச் சந்தைக்கு மீன் வாங்க சென்றார். அப்போது அங்கு திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராய் ஜோஷ் சுமிதாஸ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டூவீலர் தடுப்பு கட்டையில் மோதி விபத்து -வாலிபர் பலி
திருச்சி இ.பி.ரோடு நாகசுந்தரம் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் ( 44 ). இவரது மகன் வீர வசந்தகுமார் ( 23 ) இவர் தனது உறவினர் கௌதம் என்பவருடன் சேர்ந்து நேற்று காவேரி பாலம் பொன்னுரங்கபுரம் பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பாலத்தின் சுவரில் மோதியது .இந்த விபத்தில் வீர வசந்தகுமார் தலையில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பின்னே அமர்ந்து வந்த கௌதம் காயம் அடைந்தார். அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வடக்குப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.