17 வயது சிறுவனுக்கு கத்தி குத்து
திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பாலக்கரை சங்கிலியாண்ட புரம் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி
கிஷோர் (வயது 21) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு சில சிறுவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது இந்த நிலையில் கடந்த 24 ந்தேதி அந்த 17 வயது சிறுவன் அங்கு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கிஷோர் அவரை கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். காயமடைந்த 17 வயது சிறுவன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து கிஷோரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு 17 வயது சிறுவனை பிடித்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய பூரான் என்பவரை தேடி வருகின்றனர்.
முதியவரிடம் தகராறு.. 3 பேர் கைது
திருச்சி சாத்தனூர் மணல்மேல் பட்டியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது61) ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர். இவர் நேற்று கேகே நகர் தென்றல் நகர் பகுதியில் உள்ள உணவகத்திற்கு தன் மருமகனுடன் உணவருந்த வந்துள்ளார். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் மது போதையில் கிறிஸ்டோபர் மற்றும் அவரது மருமகனை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கே கே நகர் போலீசார் வழக்கு பதிந்து ஏர்போர்ட் அம்பலக்காரன் பட்டியைச் சேர்ந்த ராஜ் கண்ணன் (வயது 43, ) கார்த்திக் (வயது26) மற்றும் அண்ணாமலை (வயது 27)ஆகிய மூன்று பேரரை கைது செய்து பின்னர் ஜாமினில் வெளியே விட்டனர்.
ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து..
திருச்சி திருவானைக்கோவில் அழகிரி புரததைச் சேர்ந்தவர் ராகவேந்திரன் (வயது42 )ஆட்டோ டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா (வயது 23). இவரும் ஆட்டோ ஓட்டுநர், மேலும் இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது இந்த நிலையில் கடந்த 26 ந் தேதி இவர் குடித்துவிட்டு ராகவேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் முகமது அலியை செல்போன் செயலி ஆட்டோ சங்கத்திலிருந்து நீக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முகமது அலி கத்தியால் குத்தி ராகவேந்திரனை காயப்படுத்தியுள்ளார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து முகமது அலி ஜின்னாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியை கர்ப்பமாகிய சிறுவன்…
திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் அந்த சிறுவன் சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். இதேபோல் அந்த சிறுவன் பலமுறை அந்த சிறுமையை பாலியல் ரீதியாக சீண்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் தனது 26 ந்தேதி சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது இதுகுறித்து திருவரங்கம் அனைத்து மகளிர் போலீசார் அந்த 16 வயது சிறுவன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் சிறுமியை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விமான நிலைய சரக்கு போக்குவரத்து ஊழியர் மாயம்…
திண்டுக்கல் மாவட்டம் புதிலிப்பை, சின்னக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது33. ) இவர் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு பிரிவில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் தன் மனைவியுடன் திருச்சி காமராஜ் நகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்தார். சமீபத்தில் தம்பதியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அவரது மனைவி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சுரேஷ் கடந்த 24ந்தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர் .
வீடு வாங்கித் தருவதாக 17 லட்சம் மோசடி
திருச்சி காட்டூர் கணேஷ் நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரர் தாமோதரன் (வயது 39) திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர் வேலு சித்தர். இவர் மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் யோகேஸ்வரனுக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் அவரிடம் திருவெறும்பூர் மலைக்கோவில் பகுதியில் ஒரு நிலம் விலைக்கு வருவதாகவும் அங்கு யோகேஸ்வரன் வீடு கட்டி வாழ்ந்தால் அவரது வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய யோகேஸ்வரன் அவரிடம் ரூபாய் 17 லட்சத்தி 90 ஆயிரத்தை கொடுத்துள்ளார் பின்னர் வேலு அவருக்கு நிலத்தையும் வாங்கி தராமல் பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றியதாக தெரிகிறது இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசார் வேலு மற்றும் அவரது உறவினர் ஹரிஷ்மா (வயது 26 1ஆகியோர் மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.