Skip to content

3 கடைகளில் பயங்கர தீ…. போதை மாத்திரை விற்பனை… திருச்சி க்ரைம்

  • by Authour

3 கடைகளில் பயங்கர தீ – 2 கார்கள்,5 டூவீலர்கள் எரிந்து நாசம்

திருச்சி கே.கே.நகர் பேங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் சங்கர் ( 56). இவர் அப்பகுதியில் ஆட்டோ மொபைல் கார் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு தனது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார். பின்னர் நேற்று நள்ளிரவு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள், 5 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் தீயிலிருந்து எரிந்து நாசமாகின. மேலும்
அருகிலுள்ள 2 கடைகளுக்கும் தீ பரவியது. உடனடியாக, தீயணைப்பு மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், 2 கார்கள், மற்றும் 5 டூவீலர்கள் முழுமையாக எரிந்தது. மேலும் அருகில் உள்ள இரண்டு கடைகளும் தீப்பற்றியதில் மொத்தம் 14 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாய் என கூறப்படுகிறது இது குறித்து கே கே நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தட்டு ரிக்ஷா ஓட்டுநர் மீது தாக்குதல் -ரவுடி கைது

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் ( 55). தட்டு ரிக்‌ஷா ஓட்டுநர். இவரும் இவரது மனைவியும் தனது உறவினரை சந்திக்க ராமமூர்த்தி நகருக்குச் சென்றனர். அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த நபர்,தங்கவேலு மற்றும் அவரது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் தாக்கினார். இதில் தங்கவேலுவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகர் சேர்ந்த ஏழுமலை ( 31,) என்ற ரவுடியை கைது செய்தனர்.

போதை மாத்திரைகள் விற்பனை – 5பேர் கும்பல் தப்பி ஓட்டம்

திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது வண்ணாரப்பேட்டை அங்கன்வாடி அருகே சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பலை பிடித்து போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிந்து புத்தூர் நடு வண்ணாரப்பேட்டை திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்த தனுஷ் (24) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 47 போதை மாத்திரைகள், ஊசி மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த ரிஷிகேஷ், சதாசிவம், லோகேஷ், செல்வா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாலிபரை தாக்கி பணம் பறித்த ரவுடி கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பாச்சூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜ் (29 ).இவர் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை டாஸ்மாக் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக வந்த வாலிபர் மது அருந்த பணம் கேட்டு கட்டையால் தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்த வீரையன் (23)என்ற ரவுடியை கைது செய்தனர்.

error: Content is protected !!