Skip to content

மூதாட்டி மாயம்..கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்…. திருச்சி க்ரைம்

ஸ்ரீரங்கத்தில் மூதாட்டி மாயம்

ஸ்ரீரங்கம், மங்கம்மா நகர் வியாசா ராஜா நகரை சேர்ந்தவர் சேதுபதி இவரது மனைவி ராஜாமணி (வயது 82 )இவர் சற்று மனநிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் கடந்த 13 ந்தேதி வீட்டில் இருந்த ராஜாமணி திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது மகன் ரவி திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாமணியை தேடி வருகின்றனர்.

கல்லூரி மாணவியை கர்ப்பமாகிய வாலிபர்

திருச்சி செப் 15- திருச்சி தாராநல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய இளம் பெண் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இந்த நிலையில் காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த ஹரி (வயது 25, என்ற வாலிபர் அவருடன் பழகி வந்தார். இதனால் இருவருக்கிடையே காதல் ஏற்பட்டது.இந்த காதலுக்கு கல்லூரி மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ஹரி கல்லூரி மாணவியை
ஏமாற்றி அவரை கர்ப்பம் ஆக்கிவிட்டார்.இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கல்லூரி மாணவியின் தாய் இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கல்லூரி மாணவியை அரசு மருத்துவமனையில் அனுமதித்து அவரை பரிசோதனை செய்து பார்த்தபோது மாணவி கர்ப்பமாகி 45 நாட்கள் ஆகிறது என தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒட்டல் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை

திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா இவரது மகன் லோகேஷ் (வயது 22)இவர் திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அவரது தந்தை ராஜா மகன் லோகேஷிடம் சம்பள பணம் கேட்டுள்ளார்.அதற்கு லோகேஷ் நாளை தருகிறேன் என்று கூறிவிட்டு அவருடைய அறைக்கு சென்று விட்டார்.இந்த நிலையில் நேற்று நீண்ட நேரம் ஆகியும் லோகேஷ் அறை கதவை திறக்கவில்லை.பிறகு அவரது தந்தை ராஜா ஜன்னல் வழியாக பார்த்த பொழுது லோகேஷ் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த ராஜா உடனடியாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கிய லோகேஷ் உடலை கைப்பற்றி புனித பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டூவீலரில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

புதுக்கோட்டை மாவட்டம் காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மகன் கார்த்திகேயன் (வயது 22)இவர் கடந்த 6ந்தேதி புதுக்கோட்டையில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எடமலை பட்டி புதூரில் இருந்து பஞ்சப்பூர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் கார்த்திகேயன் சென்று கொண்டு இருந்தபோது திடீரென்று இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று நிலை தடுமாறி சாலையின் நடுவே கார்த்திகேயன் டூவீலருடன் கீழே விழுந்தார். இந்த விபத்து சம்பவத்தில் கார்த்திகேயன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து நேற்று கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!