Skip to content

வெவ்வேறு சம்பவங்களில் திருச்சியில் வாலிபர் உட்பட 2 பேர் சாவு


திருச்சி காந்தி மார்க்கெட் தையல்காரர் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 59 இவர் நேற்று திருச்சி சென்னை நெடுஞ்சாலை அருகே தன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார், அப்போது அதே வழியாக பெரம்பலூர் மாவட்டம் ஆலந்துறை சேர்ந்த கோபிநாத் (வயது20) என்ற வாலிபர் தன் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக போட்டி போட்டு வந்துள்ளார். அப்போது கோபிநாத் முன்னே சென்று கொண்டிருந்த முருகேசனின் இருசக்கர வாகனத்தில் மோதினார். இதில் இரண்டு பேரும் இரு சக்கர வாகனத்துடன் நிலை தடுமாறி கீழே விழுந்தனர் அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த பதிவு எண் தெரியாத வாகனம் கோபிநாத் தலை மீது ஏறி சென்றது இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த முருகேசன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இது குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய அந்த பதிவு எண் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று
திருச்சி மன்னார்புரம் அருகே இன்று அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் சாலையில் நின்று இருந்தபோது அந்த வழியாக அதிவேகமாக வந்த பதிவு எண் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலத்த காயங்களுடன் உடல் சிதைந்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருச்சி மேற்கு எடமலை பட்டிப்புதூர் பிரிவு கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபன் அளித்த புகாரின் பேரில் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய அந்த பதிவு எண் தெரியாத வாகனம் குறித்தும், இறந்த நபர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!