Skip to content

மகளிர் போலீசாரை திட்டிய பெண் மீது வழக்கு… திருச்சி கிரைம்..

  • by Authour

 

டிப்ளமோ பட்டதாரி மயங்கி விழுந்து சாவு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி சாலையைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 41)டிப்ளமோ முடித்துவிட்டு வணிகம் செய்து வந்தார். மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது இந்த நிலையில் இவர் தன் உறவினருடன் திருச்சி கலைஞர் அறிவாலயம்
அருகே தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று கார்த்திக் தான் இருக்கும் பகுதி அருகே மயங்கிய நிலையில் கிடந்தார் இதையடுத்து அவரை உடனடியாக ஆம்புலன்சில் மிட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கார்த்திக் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

வழிப்பறி திருடர்கள் கைது

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை திருவேங்கடம் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது29)இவர் நேற்று அம்பிகாபுரம் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து அரியமங்கலம் மேல் அம்பிகாபரத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடியான ஹரிஹரன் (வயது 20 )மற்றும் ராஜ் பிரசாந்த் (வயது20 )ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர் பிறகு அவர்களிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

 

சட்டவிரோதமாக மது விற்ற வாலிபர் கைது..

திருச்சி பாலக்கரை கெம்ப்ஸ் டவுன் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக பாலக்கரை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் போலீசார்ங்கு சோதனை நடத்தி மது விற்ற பாலக்கரை செபாஸ்டியன் கோயில் தெருவை சேர்ந்த சஞ்சய் ஜோசப் (வயது23)என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 30 மது பாட்டில்கள் மற்றும் மது விற்ற பணம் ரூபாய் 24 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

மகளிர் போலீசாரை திட்டிய பெண் மீது வழக்கு

திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கிரிஜா (வயது29) இவர் மீது திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாலக்கரை போலீசார் கடந்த 1ம் தேதி கிரிஜாவை விசாரிக்க அழைத்து வர அவரது வீட்டிற்கு சென்றிருந்தனர். அப்போது கிரிஜா வீட்டினுள் தன்னை வைத்து பூட்டிக்கொண்டு தன் உடம்பை தானே கூர்மையான ஆயுதங்களை வைத்து கிழித்துக்கொண்டு அவரை விசாரிக்க அழைத்துச் செல்ல வந்த மகளிர் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி அவர்களது கடமையை செய்வதை தடுத்துள்ளார். மேலும் அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த பின்னும் போலீசாரை அவர் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதுகுறித்து பாலக்கரை போலீசார் கிரிஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!