திருச்சி மணப்பாறை மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ். இவரது மனைவி ஹேமா மெர்சியா (33). இந்த தம்பதியருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். சமீப காலமாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த ஹேமா யாரும் எதிர்பாராத வகையில் சுடிதார் துப்பட்டாவில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
இது பற்றி கணவர் சார்லஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வையம்பட்டி போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

