திருச்சி டிஐஜி வருண்குமார் மீதும், அவரது குடும்பததினர் மீதும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறு பரப்புவதாக வருண்குமார், வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு திருச்சி குற்றவியல் கோர்ட் எண் 4ல் நடந்து வருகிறது. கடந்த 2 முறை சீமான் கோர்ட்டுக்கு வராத நிலையில் வழக்கு மே 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று சீமான் ஆஜராகவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்றும் சீமான் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இருதரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், வழக்கு விசாரணை வரும் ஜூன் 4ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.