Skip to content

திருச்சி மாவட்ட எஸ்பியாக செல்வநாகரத்தினம் பொறுப்பேற்பு….

  • by Authour

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு எவ்வித இடர்பாடும் இல்லாமல், சட்டம் ஒழுங்கை நல்லமுறையில் பேணிகாக்கப்படும் எனவும், ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் சொத்து தொடர்பான வழக்குகளை விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், மேற்கொண்டு எவ்வித குற்றங்களும்

நடைபெறாமல் இருக்கவும், மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

பொது மக்களின் குறைகளை உடனுக்குடன் களைந்து தீர்வு காணப்படும் எனவும், அவர்களுடன் காவல்துறையினர் நல்லுறவு மேம்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

காவல் துறையினரின் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றி, நல்லமுறையில் எவ்வித மனசோர்வு இல்லாமல் பணியாற்ற வழிவகை செய்யப்படும் எனவும், காவல் நிலையங்களில் திறன்பாடு மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!