திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு, திருச்சி சாலை ரோட்டில் இருந்து தென்னூர் மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் வரை நாளை (ஜன.25) மாலை ஊர்வலம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்வில் திமுகவினர் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

