திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் எம்.கே.எம் காதர் மைதீன் தலைமையில் செயலாளர் டி.கந்தசாமி,பொருளாளர் ஜி. வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் கூட்டமைப்பு நிர்வாகிகள்,வியாபாரிகள் திருச்சியில் நடந்த திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு கனிமொழி எம்.பி யை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் வரைபடம் வெளியிடப்பட வேண்டும்.
14.11.2025 அன்று ஆட்சியர் சரவணன் எங்களிடம் எழுத்துப்பூர்வமாக கடைகளும், அதன் அளவுகளும் கேட்டதன் அடிப்படையில், நாங்கள் தெளிவான விளக்க அறிக்கை கொடுத்தும் இதுவரை எங்களை அழைத்து கலந்து ஆலோசிக்கவில்லை.
தரைத்தளம் மட்டுமே கட்ட வேண்டும். ( மாடி வைத்துக் கட்டக்கூடாது ) வியாபாரிகள்,
விவசாயிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், பொதுமக்கள் மாடியில் ஏறி இறங்க முடியாது.
பஞ்சப்பூர் அல்லது வேறு எங்கு புதிய காய்கறி மார்க்கெட் திருச்சியில் கட்டினாலும் முழுமையாக கட்டி முடிக்காமல் திறப்பு விழா நடத்தக் கூடாது. திருச்சி காந்தி மார்க்கெட் எக்காரணம் கொண்டும் இடமாற்றம் செய்யப்படாது என்றும்,
ரூபாய். (50) ஐம்பது கோடியில் புணரமைக்கப்பட்டு, தொடர்ந்து காந்தி மார்க்கெட்
இருக்கும் இடத்திலேயே செயல்படும் என்றும், (25.03.2025) சட்டமன்றக்
கூட்டத்தொடரிலேயே திருச்சி காந்தி மார்கெட் அருகில் உள்ள சிறைச்சாலையை அகற்றி விட்டு, காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய பரிசீலிக்கப்படும் என்று (15.10.2025) சட்டமன்ற கூட்டத்தொடரில் அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார்கள். தற்பொழுது கட்டப்பட்டு வரும் பஞ்சப்பூர் புதிய காய்கறி மார்க்கெட்டை (22) ஏக்கரில் கட்டித்தருகிறோம் என்று கூறிவிட்டு, தற்போது (11) ஏக்கரில் மட்டுமே கட்டப்பட்டு வருகிறது. அதுவும் அவசர அவசரமாக கட்டுகிறார்கள். மேலும், அமைச்சர். வேறொரு நாள் சட்டமன்றக் கூட்டத்தொடரில் உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
இச்சூழலில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஞ்சப்பூர் மார்க்கெட் வெளி ஆட்களுக்கு டெண்டர்
விடுவதாக அறிகிறோம். புதிதாக கட்டப்பட்டு வரும் கடைகளை திருச்சி காந்தி மார்க்கெட்
வியாபாரிகளுக்கு மட்டுமே கடைகள் தர வேண்டும். எக்காரணம் கொண்டும் வெளி
ஆட்களுக்கோ, வெளியூர் வியாபாரிகளுக்கோ, கட்சிக்காரர்களுக்கோ கடைகள்
ஒதுக்கக்கூடாது- திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள எந்த ஒரு வியாபாரிகளுக்கும் புதிய மார்க்கெட்
கடைகள் விடுபட்டு விடக்கூடாது. திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு மட்டுமே
புதிய மார்க்கெட்டில் கடைகள் தர வேண்டும். புதிய மார்க்கெட் முழு செயல்பாட்டிற்கு வரும் வரை திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு வரும் எந்த ஒரு காய்கனி வாகனங்களையும் மாநகருக்குள் நுழைய தடை விதிக்க கூடாது. (சென்னை) கோயம்பேடு மார்க்கெட் போலவே அரசு நிர்ணயிக்கும் தொகைக்கு எங்களுக்கு பதிய கடைகளை சொந்தமாக வழங்க வேண்டும்.என்பது உள்ளிட்ட அனைத்துகோரிக்கைகளையும் எங்களுக்கு முழுமையாக செயல்படுத்தி காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் பத்தாயிரம் குடும்பங்களை வாழ வைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

