திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உடல் நசுங்கி பரிதாப சாவு இருவர் காயம் பட்ட நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி புதிய பேருந்து முனையத்தில் நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்ட 1டூ1 ஏசி அரசு பஸ் திருச்சி தஞ்சை சாலையில் துவாக்குடி என்ஐடி அருகே வந்து கொண்டிருந்தது. பஸ்சை தஞ்சாவூர் ரவிச்சந்திரன் (54) டிரைவர் ஓட்டி வந்தார் கண்டக்டர் மணிகண்ட பிரபு டிரைவர் இருக்கைக்கு இடதுபுற இருக்கையில் அமர்ந்திருந்தார் இவருக்கு பின்னால்
இருந்த இருக்கையில் தஞ்சாவூர் பேராவூரணி பகுதியை சேர்ந்த சந்திர போஸ் மனைவி செல்வி (52) அமர்ந்திருந்தார் அவரது இருக்கைக்கு பின் இருக்கையில் தஞ்சாவூர் விஜயகுமார் என்பவரின் மகள் கல்லூரி மாணவி அட்சயா (20) அமர்ந்து இருந்தார் பஸ் துவாக்குடி முன்பு அரசு அச்சகம் எதிரில் வந்து கொண்டிருந்த பொழுது அங்கு இருந்த பேரிகாடில் வளைந்து திரும்பி ராவுத்தான் மேடு பகுதிக்கு வலது புறம் திரும்புவதற்காக நின்று கொண்டிருந்த ட்ரெய்லர் லாரி மீது பஸ் இடது பகுதி எதிர்பாராத நிலையில் மோதியது இதில் கண்டக்டர் தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார் அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த செல்வி நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே இறந்தார் .
அதற்கு பின்னால் அமர்ந்திருந்த அக்ஷயா இரண்டு கால்கள் முறிந்த நிலையில் படுகாயம் அடைந்தார் தகவல் அறிந்த துவாக்குடி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து போன செல்வியின் உடலை கைப்பற்றி துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் படுகாயம் அடைந்த கண்டக்டர் மணிகண்ட பிரபு,அக்ஷயா ஆகிய இருவரையும் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது