திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்துள்ள அன்பில் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அன்பில் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா இன்று காலை நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் மகேஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் மாரியப்பன் கலந்து கொண்டார். பாராளுமன்ற தேர்தல் நேற்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலாகியுள்ளன. இந்த சூழ்நிலையில் பூச்சொரிதல் நிகழ்ச்சியில் அமைச்சருடன் இணை ஆணையர் மாரியப்பன் கலந்து கொண்டது விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை இணை ஆணையர் மாரியப்பன் மீறி விட்டதாக புகார் எழுந்துள்ளது..
தேர்தல் நடைமுறையை மீறினாரா திருச்சி அதிகாரி… ?
- by Authour
