தனிநபராக செயல்பட்டு ஊழலில் ஈடுபடும் அறங்காவலருக்கு துணை போகும் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கண்டித்து – கிராம பொதுமக்கள் ஒருநாள் உண்ணாவிரதம் போராட்டம் .
திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த புள்ளம்பாடி அருகே உள்ள மால்வாய் கிராமத்தில் மிகவும் பழமையான ஸ்ரீ பூமி பாலகர், அய்யனார் பிடாரி கருப்பு,செல்லியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது .
இந்த பூமி பாலன் கோவிலுக்கு மால்வாய் கிராமம் மக்களின் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
இக்கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கறுப்புடையார் என்பவர் கோவில் பூசாரி ஆக இருந்து வந்தார். அதன் பிறகு அவரது மகன் சந்திரசேகர் இறந்த நிலையில் அவரது மகன் தனபால் அவரது சித்தப்பா பாஸ்கர் ஆகிய இருவரும், பூமி பாலன் கோவிலில் ஒரு வருடமாக பூசாரியாக இருந்து வருகின்றனர். மேலும் இத்திருக்கோவில் ஆண்டுக்கு 10 லட்சம் மதிப்பிலான உண்டியல் காணிக்கைகள் பெறப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டு வருகிறது .
இந்நிலையில் கோவிலில் அறங்காவலர் பொறுப்பில் இருந்து வரும் கோவில் பூசாரியான பாஸ்கரன் என்பவர் பதவி வகித்து வருகிறார் . இத்திருக்கோவில் எனக்குத்தான் முழு உரிமை எனக் கூறி அநாகரிகமாக நடந்து கொண்டு வருகிறார் என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .
குறிப்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் வந்ததாகவும் இதற்கு பரம்பரை அறங்காவலர் என இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் உதவியுடன் சான்றிதழ் பெற்று கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் உண்டியல் கணக்கில் கையாடல் செய்தும் கோவிலுக்கு சொந்தமான நகைகளை தனது இல்லத்தில் வைத்து கொண்டு தன்னிச்சையாக செயல்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
மேலும் திருக்கோவில் கும்பாபிஷேக பணிக்காக பாலாபிஷேகம் செய்வதற்கு முன்னதாகவே போலியாக கும்பாபிஷேக நிதி பெறுவதற்கான புத்தகம் அச்சடித்து 3,000 , 5,000 10,000, 25,000 என வசூல் செய்து 30 லட்சத்திற்கு மேலாக மோசடி செய்தது அப்பகுதி பொது மக்களுக்கு தெரிய வரவே அது குறித்து சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குற்றம் சாட்டபட்ட பாஸ்கர் மற்றும் அப்பகுதி மக்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அவர் மீது சாட்டப்பற்ற அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டார், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .
கோவில் திருப்பணி கடந்த 2 1/2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு கும்பாபிஷேக பணிகள் நடைபெறாமல் இருப்பதால் குடிப்பாட்டு
மக்கள் தங்களது இல்ல சுப காரியங்கள் செய்ய முடியாமல் தவிப்பதாகவும் கூறுகின்றனர் .
தனிப்பட்ட நபருக்கு துணை போகும் அதிகாரிகள் மற்றும்அறங்காவலர் மீதும் நடவடிக்கை எடுத்து உடனடியாக திருப்பணியை முடித்து கும்பாபிஷேகம் நடத்தி கடந்த 26 ஆண்டுகளாக நடைப்பெறாமல் இருக்கும் திருத்தேர் திருவிழா நடத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும் கோவில் செலவு கணக்கில் பல முறைகேடுகள் நடந்துள்ளதும் நடைபெறாத பணிகளுக்கு பொய் கணக்கு எழுதி கையாடல் செய்திருப்பதால் குழு அமைப்பு உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இது குறித்து காவல்துறை இந்து சமய அறநிலைத்துறைக்கு புகார் அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக இந்த கோவிலை இந்து அறநிலையத்துறை எவ்வாறு தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது, கிராம மக்களுக்கே தெரியாமல் நடந்த சம்பவம் ஆகும்.
ஆகையால் இந்து அறநிலை துறை அதிகாரிகளை கண்டித்து இன்று மால்வாய் கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அய்யனார் கோவிலை கிராம மக்களே நிர்வாகம் செய்ய வேண்டும் கிராம மக்களுக்கு மட்டும் சொந்தமான கோவிலாகும் உடனடியாக இந்து அறநிலையத்துறை இக்கோவிலில் இருந்து விலக வேண்டும், முறைகேடுகள் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் அதற்கு உடனடியாக இருந்த அனைவரின் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
எங்களுடைய கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்ற வில்லை என்றால் இந்தப் போராட்டம் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.