Skip to content

ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் திருச்சி ஐஜி ஆய்வு

  • by Authour

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகம், மற்றும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு…

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் அரியலூர் மாவட்டகாவல் அலுவலகத்திற்கு வருகை புரிந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரியுடன் மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை செய்தார். இதனையடுத்து காவல் அலுவலகத்தில் இயங்கும் காவல்துறை புகைப்பட பிரிவினை பார்வையிட்டு

அவற்றின் செயல்பாடுகள், பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்தும் மற்றும் நவீன கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் அவசர உதவி எண்ணான 100- ஆனது பொது மக்களுக்கு எவ்வாறு உதவுகிறது, அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்தார்கள். போக்சோ, குழந்தை திருமணம், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைவாக நடவடிக்கை எடுக்கவும், குற்றவாளிகளுக்கு துரிதமாக தண்டனை பெற்றுத் தரவும் காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.

இந்நிகழ்வின் போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன், ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சக்கரவர்த்தி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சுபா மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தார்கள்.

error: Content is protected !!