Skip to content

பாதாள சாக்கடை திட்டப் பணி துவங்கவில்லை- திருச்சி மேயரிடம் குற்றச்சாட்டு

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் மதுபாலன் துணை மேயர ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் துணை ஆணையர்கள் வினோத், பாலு, நகரப் பொறியாளர் சிவபாதம் ,மண்டல குழுத் தலைவர்கள் மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், பி.ஜெயநிர்மலா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

எல். ரெக்ஸ் (காங்கிரஸ்):

கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாட்டு நடவடிக்கை உடனடி அறிவிப்பு வேண்டும். ⁠குப்பைக்கிடங்கு மண்டலத்திற்கு ஒன்று என், 5 குப்பைக்கிடங்கு அமைக்க வேண்டும்.பால்பண்ணை முதல் துவாக்குடி வரை தேசிய நெடுஞ்சாலை விளக்கு சீர் செய்ய நெடுஞ்சாலை துறையினை அறிவுறுத்தவேண்டும்.

கோ.கு. அம்பிகாபதி (அதிமுக மாநகராட்சி தலைவர்):

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அருகில் பைபாஸ் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.இதனால் பொதுமக்கள் நலன் கருதி உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.

ந.பிரபாகரன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) :
எனது வார்டு பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி பொது கழிப்பிடங்கள் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பைஸ் அகமது (மனிதநேய மக்கள் கட்சி) :

எனது வார்டு பகுதியில் மக்கள் கோரிக்கையை ஏற்று வளர்ச்சி பணிகள் மேற்கொண்ட மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மேயருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதிக்பாட்ஷா (திமுக):

எனது 19-வது வார்டில்
பாதாள சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.பாதாள சாக்கடை தூர்வார டெண்டர் விட்டும் ஒப்பந்த தாரர்கள் யாரும் பணியை டெண்டர்எடுக்க முன்வரவில்லை.ஏனென்றால் எனது வார்டில்ல் உள்ள தெருக்கள் குருகலாக உள்ளது.எனவே பொதுமக்கள் நலன் கருதி பாதாள சாக்கடை தூர் வாரும்பணியை உடனடியாக மேற்கொள்ள மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காஜாமலை விஜய் (திமுக):

எனது வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தேன்.ஆனால் கோரிக்கையை ஏற்று திட்டப்பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை .இதனால் நான் வெளிநடப்பு செல்கிறேன் எனக் கூறிவிட்டு காஜாமலை விஜய் வெளிநடப்பு செய்தார். திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலரே வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கவுன்சிலர்கள் விவாதத்திற்கு பின் 92 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

error: Content is protected !!