திருச்சி மாவட்டம் துறையூரில் அக்னி வெயிலின் தாக்கம் கடந்த இரண்டு நாட்களாகவே அதிகமாக காணப்பட்டு வருகிறது.
சதம் அடிக்கும் வெயிலின் கொடுமையை சமாளிக்கும் வகையில் பொதுமக்கள் உடலுக்கு குளிர்ச்சியான இளநீர் வெள்ளரிப்பிஞ்சு மோர் ஆகியவற்றை பருகி வருகின்றனர்
இதனை அறிந்த திராவிட முன்னேற்றக் கழக முதன்மைச் செயலாளரும் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி துறை
அமைச்சர் கே.என் நேருவின் ஆணை படியும் திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாள காடுவெட்டி தியகராஜன்
சார்பில் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது .
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை இன்று வெயிலின் தாக்கத்தினை
பொதுமக்களுக்கு
தீர்க்கும் வகையில் நீர் மோர் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில்
மாவட்ட பிரதிநிதி ரெங்கநாதபுரம் கார்த்திகேயன்… தொழிலதிபர் கண்ணனூர் வீரப்பன்… அரசு வழக்கறிஞர் ஜெயராஜ்.. ஒன்றிய துணை செயலாளர் அன்புகாந்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.