Skip to content

திருச்சி மூதாட்டி கொலை- 2 பேரிடம் விசாரணை

திருச்சி  அடுத்த  சோமரசம்பேட்டை அருகேயுள்ள போசம்பட்டி மேல தெருவை சேர்ந்தவர் ராஜம்மாள் (70). இவர் போசம்பட்டி கணேசபுரத்தில் உள்ள தனது சகோதரர் பன்னீர்செல்வம் வீட்டில் தங்கி அவருக்கு சமையல் செய்து கொடுத்து வந்தார்.  நேற்று மாலை வீட்டில் இருந்த ராஜம்மாளை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி அவரது மூக்கை அறுத்து மூக்கில் அணிந்திருந்த ஒரு பவுன் மூக்குத்தியை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

படுகாயமடைந்த ராஜம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த ஜீயபுரம் டிஎஸ்பி பழனி, சோமரசம்பேட்டை போலீசார்
சம்பவ இடத்திற்கு சென்று ராஜம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்கு பதிவு செய்து போசம்பட்டி கணேசபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (32), குணா (30) ஆகிய இருவரையும்  பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!