திருச்சி மாநகரில் பள்ளி,கல்லூரி படிக்கும் மாணவர்களிடம் போதை பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மர்ம கும்பல் செயல்பட்டு வருவதாக திருச்சி மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சோனியா காந்தி தலைமையில் திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது எடத்தெரு ரோடு பகுதியில் கழிவறை அருகில் ஒரு வாலிபர் நின்று நின்று கொண்டு இருந்தார். இதனை பார்த்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து அவரிடம் விசாரணை நடத்திய போது போதை மருந்து விற்க நின்று கொண்டிருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த வாலிபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது திருச்சி பாலக்கரை எடத்தெடு பிள்ளைமாநகர் சேர்ந்தவர் சச்சின் (வயது 19)என்பது தெரிய வந்தது. இவர் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதை மருந்து விற்க முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சச்சினை கைது செய்து அவரிடமிருந்து போதை மருந்து, ஊசி, உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதை மருந்து விற்ற வாலிபர் கைது…
- by Authour
