திருச்சி மாவட்டம், வையம்பட்டி 110/33-11 கி.வோ. துணை மின் நிலையம் மற்றும் நடுப்பட்டி 33 கி.வோ துணை மின் நிலையத்தில் எதிர்வரும் 29-08-2024, வியாழக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வையம்பட்டி மற்றும் நடுப்பட்டி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கீழ்காணும் மின் வினியோகப் பகுதிகள் அனைத்திற்கும் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடைக்குள்ளாகும் பகுதிகள்.. 1. வையம்பட்டி, இளங்காகுறிச்சி, கருங்குளம், ஆசாத் ரோடு, பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை, பழையகோட்டை, குரும்பப்பட்டி, சரளப்பட்டி, சேசலூர், பாலப்பட்டி, அம்மாபட்டி, அயன்ரெட்டியபட்டி, முள்ளிப்பாடி, வையம்பட்டி, தொப்பாநாயக்கன்பட்டி, இடையபட்டி, T.கோவில்பட்டி, குமராவாடி ஊத்துப்பட்டி, வையம்பட்டி (கிடங்குடி), தாமஸ்நகர், அஞ்சல்காரன்பட்டி, இளங்காகுறிச்சி, ஆவாரம்பட்டி, ஆலத்தூர், ம.குரும்பப்பட்டி, மணியாரம்பட்டி, வலையபட்டி, பழையக்கோட்டை.
2. நடுப்பட்டி, ராமரெட்டியபட்டி, கடவூர், கண்ணூத்து, எளமணம், ‘புதுவாடி, சீத்தப்பட்டி, துலுக்கம்பட்டி, கல்பட்டி, மேலகல்பட்டி, புதுக்கோட்டை, சீகம்பட்டி, மூக்கரெட்டியபட்டி, கல்கொத்தனூர், அனுக்காநத்தம், புங்கம்பாடி, வையம்பட்டி (வடக்கு) பகுதி, இனாம்ரெட்டியபட்டி, குரும்பபட்டி, புறத்தாக்குடி, குமாரவாடி, ஓந்தாம்பட்டி, செக்கணம், களத்துப்பட்டி, சக்கம்பட்டி, மணியாரம்பட்டி, பெரிய அணைக்கரைப்பட்டி, முகவனூர், சின்ன அணைக்கரைப்பட்டி, புதுமணியாரம்பட்டி, பாம்பாட்டிபட்டி, ஆ.மு.பிள்ளைகுளம், பொன்னனியாறுடேம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.