திருச்சியில் 11 கே.வி. E.B.ரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் 11கி.வோ. வெல்லமண்டி உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 17.05.2025 (சனிக்கிழமை) காலை 09.45 மணி முதல் மணி மதியம் 02.00 வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துணைமின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் மணிமண்டப சாலை, காந்தி மார்கெட், கல்மந்தை, ராணித்தெரு, பூலோக நாதர் கோவில் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணாபுரம் வாழைக்காய் மண்டி, பெரிய கடைவீதி ஆர்ச் முதல் B.G. நாயுடு வரை, ரெங்கசாமி தெரு, நடு வளையல் காரத்தெரு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
