காலியாக இருந்த திருச்சி பிரஸ் கிளப் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடந்தது. இந்து நிருபர் ஜெய் சங்கர், தினமலர் நிருபர் ரமேஷ், பாலிமர் டிவி கலைவேந்தன் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலராக மக்கள் சக்தி இயக்கம் அமைப்பை சேர்ந்த கே.சி.நீலமேகம் நியமிக்கப்பட்டார். 91 உறுப்பினர்களில் 86 பேர் வாக்களித்தனர். பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஜெய்சங்கர் 62 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். தினமலர் ரமேசுக்கு 18 வாக்குகளும், பாலிமர் கலைவேந்தனுக்கு 6 வாக்குகளும் கிடைத்தன. 44 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெய்சங்கர் வெற்றி பெற்றார். இந்த முடிவு ஒரு தரப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
திருச்சி பிரஸ் கிளப் தலைவர் தேர்தல்… பரபரப்பு முடிவு
- by Authour
