Skip to content

ஒலிம்பிக் போட்டிக்கு திருச்சி பிரித்வி ராஜ் தகுதி…

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த மாதம் (ஜூலை) 26-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த  துப்பாக்கி சுடுதல் வீரர் பிரித்வி ராஜ் தொண்டைமான் ஷாட் கன் பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவரது தலைமையில் ஒலிம்பிக் தொடருக்கான 5 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிதிவிராஜ் ஏற்கனவே  ஆசிய துப்பாக்கிச்சுடுதல் மற்றும் உலக துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக வீரர் தேர்வானதற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி உள்ள  பிரிதிவிராஜ், திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமானின் மகன் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!