கரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வி.சி.க தலைவர் திருமாவளவன் திருச்சி வந்தார். திருச்சியிலிருந்து கரூர் புறப்படுவதற்கு முன்பாக திருச்சியில் திருமாவளவன் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவை வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமலஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதேபோல் திமுகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள, வில்சன் ,கவிஞர் சல்மா உள்ளிட்ட மூன்று பேருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோன்.
அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என்பதை நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருப்பது ஆறுதலை தருகிறது. இதனை வரவேற்கிறேன்.
திருப்பி வந்த பின்னர் கருத்துக்களை தெரிவிக்கிறேன்.
நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக எதிர்கட்சிகள்
ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்துக்களை கூறுவது வியப்பாக உள்ளது.
இந்த விவகாரத்தில் நேர்மையாக தான் விசாரணை நடந்துள்ளது என தெரிவித்தார்.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகம் இருந்தால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். சி பிஐ விசாரணை கேட்கலாம்.
தமிழ் தான் திராவிட மொழிகளின் தாய் என்பதை தேவனாய பாவணர் போன்ற தமிழ் அறிஞர்கள், மொழியியல் வல்லுநர்கள் உறுதிப்படுத்தி உள்ளார்கள்.
இன்று கன்னடம், மலையாளம் பேசுபவர்கள் அந்த உண்மையை ஏற்க தயங்கலாம் ஆனால் வரலாறு வரலாறு தான் இது உண்மை .(தமிழில் இருந்து வந்தது தான் கன்னடம் என கமல் கூறியதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது)
எதிர்க்கட்சிகள் ஓர் அணியில் திரள வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதிலிருந்து அவர் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக இருப்பதாக ஒப்புக்கொண்டு உள்ளார். அதே போலச்
எதிர்க்கட்சிகள் இன்னும் ஓர் அணியாக வடிவம் பெறவில்லை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
பா.ஜ.க – அதிமுக கூட்டணி ஆளுக்கொரு திசையில் பயணிக்கும் நிலையில் உள்ளதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.திமுக கூட்டணி வலுவாக இயங்கிறதுதிமுக தலைமையிலான கூட்டணி தான் கூட்டணி என்கிற வடிவத்தோடு வலுவாக இயங்குகிறது.
அதிமுக பாஜக கூட்டணி வைத்திருந்தாலும் கூட அவர்களுக்கு இடையே ஒரு பிணைப்பு ஏற்படவில்லை.
இந்த நொடி வரை தமிழகத்தில் ஒரே ஒரு கூட்டணி தான் இருக்கிறது அது திமுக தலைமையிலான கூட்டணி என்பதையும் நயினார் நாகேந்திரன் ஒப்புக்கொண்டுள்ளார்.
திமுக கூட்டணி மீது பாஜகவிற்கு இருக்கும் பயத்தை திமுக கூட்டணிக்கு இருப்பதாக நயினார் நாகேந்திரன் மாற்றி பேசுகிறார்.
கூட்டணி அறிவித்த பின்பும் கூட பாஜக – அதிமுக இணைந்து செயல்படுவது போல் எந்த தோற்றமும் தெரியவில்லை.
அமித்ஷா கூட்டணி ஆட்சி என கூறிவிட்டு சென்றார் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் அப்படி கூறவில்லை என்கிறார். அதிலிருந்தே அவர்களுக்குள் முரண் இருப்பது தெரிகிறது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பாகவே வெளியாகி உள்ளது பல்கலைக்கழக நிர்வாகத்தில் உள்ள முறைகேடுகளை அல்லது நிர்வாகத்தின் பலவீனத்தை வெளிக்கட்டுகிறது. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. வினாத்தாள்களை மாற்றி வேறு தேதியில் தேர்வு அறிவிக்க வேண்டும்.
நூறு சதவீதம் தேர்ச்சி பெறாத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பப்பி உள்ளது. இது வரவேற்கத்தக்கது தான்
அனைத்து பள்ளிகளிலும் 100% தேர்ச்சி பெற வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எடுக்கும் முன்னெடுப்புகளுக்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அதை வரவேற்கவும் வேண்டும், கொந்தளிப்பு தேவையில்லை.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
