திருச்சி தென்னூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் மகாமுனி (55). இவருக்கு கடந்த சில மாதங்களாக வயிற்றுவலி பிரச்சினை இருந்தது. இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். பின்னர் உயிருக்கு போராடியஅவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி குப்பான்குளம் சின்ன கண்ணு தெருவை சேர்ந்தவர் அலாவுதீன் (38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பெண் குழந்தை உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி கணவரைப் பிரிந்து கடந்த இரண்டு வருடமாக தனியாக வசித்து வருகிறார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

