திருச்சி ஸ்ரீரங்கம் அடுத்த கொடியாலம் அருகேயுள்ள புலிவலத்தைச் சேர்ந்தவர் சூர்யா (24). இவர் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து வந்ததாக திருச்சி ஜங்ஷன் ரயில்வே போலீசார் அண்மையில் அவரை கைது செய்தனர்.
அவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் எண்ணம் கொண்டவர் என்பதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருச்சி ரயில்வே எஸ்பி ராஜன், டிஎஸ்பி சக்கரவர்த்தி ஆகியோர் பரிந்துரை செய்தனர். அதனடிப்படையில் சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் நேற்று உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டார்.

