Skip to content

திருமணம் ஆன 3 மாதத்தில் என்ஜினியர் தற்கொலை.. திருச்சியில் பரிதாபம்..

திருச்சி ஏர்போர்ட் அண்ணா நகர் வ உ சி தெரு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் .இவரது மகன் சூர்யா (வயது 23). பிஇ பட்டதாரியான இவர் பிரபல வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் சர்வீஸ் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் மாத்தூர் பகுதியில் உள்ள ஒரு இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது .பின்னர் அந்தப் பழக்கம் காதலாக மாறியது. அதன் பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 14. 5 .2025 அன்று சூர்யா பவித்ரா திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் புதுமண தம்பதிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது இதனால் பவித்ரா கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சூர்யா யாரும் எதிர்பாராத வகையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார் இதுகுறித்து அவரது தந்தை பால்ராஜ் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!