டிடிவி தினகரனுடன் எந்த கருத்து வேறுபாடுகளும் இருந்தது கிடையாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக எங்களுடன் இல்லை, அமமுக இருந்தது என்று நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
இன்று சென்னையில் சித்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ” தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவராக ஈபிஎஸ்-யை அறிவித்தார் அமித்ஷா. பலமுறை பேசிய போதும் டிடிவி தினகரன் என்னிடம் எந்த கருத்தையும் சொல்லவில்லை.
டிடிவி தினகரன் திடீரென என் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அண்ணாமலை, ஈபிஎஸ்-யை ஏற்கவில்லை என டிடிவி தினகரன் சொல்கிறார், ஈபிஎஸ் முதல் வேட்பாளராக வெற்றி பெற வேண்டும் என நெல்லை மாநாட்டில் அண்ணாமலை நேரடியாக அறிவித்தார்.
அனைவரும் ஒன்றாக இருந்தால் தான், எதிரியை வீழ்த்த முடியும். டிடிவி தினகரன் பேசியது மன வருத்தத்தை தருகிறது. 2001-ல் நடந்த தேர்தலில் என் போன்றவர்கள் அதிமுகவில் உயர்நிலை வருவதற்கு டிடிவி சார் காரணமாக இருந்தார். அவரோடு எந்தக் கருத்து வேறுபாடும் எனக்கு இருந்தது கிடையாது. தற்போது தே.ஜ கூட்டணியை பொறுத்தவரை, EPS-ஐ தலைவராக உள்துறை அமைச்சர் அறிவித்தார்.
நான் அறிவிக்கவில்லை, அகில இந்திய தலைமை சொல்வதை கேட்பதுதான் எனது பொறுப்பு. ஆனால் திடீரென, தே.ஜ கூட்டணியிலிருந்து வெளியேற நயினார்தான் காரணம் என டிடிவி சார் சொல்கிறார். நான்தான் காரணம் என்பது எந்த அடிப்படையில் என்பது புரியவில்லை?” எனக் கூறியுள்ளார்.