Skip to content

டிவியில் அதிக சத்தம்.. நண்பனை கொலை செய்த சக நண்பன் கைது…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(38) வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர் தனியாக வசித்து வருகிறார். இவரது நண்பரான செல்லாண்டி பாளையத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி (39) என்பவரும் சேர்ந்து கண்ணன் வீட்டில் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

வழக்கம்போல் நேற்று இருவரும் வீட்டில் மது அருந்தி உள்ளனர் அப்போது ஆசைத்தம்பி டிவியில் அதிக ஒளி வைத்து பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது அப்போது கண்ணன் அதனை குறைக்கும்படி கூறியுள்ளார் டிவியின் சத்தத்தை குறைக்காத ஆத்திரத்தில் கோவம் அடைந்த கண்ணன் அருகில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை கொண்டு மார்பில் குத்தி கொலை செய்து உள்ளார்.

அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த கண்ணன் உறவினர்களுக்கு போன் செய்து இருவரும் மது அருந்தியதாகவும் எழுந்து பார்த்த போது ஆசைத்தம்பி உயிரிழந்து கிடந்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், சம்பவ இடத்தில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா மற்றும் காவல் துறை அதிகாரிகள் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்கள் குறித்து விசாரணை நடத்தி நடத்தி வந்தனர்.

இதனையடுத்து ஆசைத்தம்பி உடலை கைப்பற்றிய போலீசார் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து.

வீட்டிலிருந்த கண்ணன் என்பவரை பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நண்பனை நான் தான் கொலை செய்து விட்டதாக பின்னர் ஒப்புக்கொண்டு உள்ளார்.

கொலை நடந்த இடம் பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது பெருமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!