Skip to content

ஏர் உழும்போது மின்சாரம் பாய்ந்து… 2 காளை மாடுகள் பலி…

திருத்தணி அருகே வீரகநல்லூர், சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (55). விவசாயி. இவர், அதே பகுதியை சேர்ந்த வெங்கடரத்தினம் என்ற விவசாயியின் நிலத்தில் இன்று காலை உழவு பணியில் ஈடுபடுவதற்காக தனது 2 காளை மாடுகளை ஓட்டி சென்றார்.

பின்னர் ஏர் கலப்பையில் 2 மாடுகளை பூட்டி நிலத்தை உழுது கொண்டிருந்தபோது வயல்வெளியை ஒட்டியிருந்த மின்கம்பத்தின் உள்ள கம்பியில் 2 காளை மாடுகளும் உரசியபடி சென்றன. இதில் திடீரென மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே 2 மாடுகளும் பரிதாபமாக இறந்தது.
இதில் விவசாயி கண்ணன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!