Skip to content

புதுகை அருகே டூவீலரில் லாரி மோதி 2 பேர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா வாளரமாணிக்கம் சமுத்திராபட்டி காலனியை சேர்ந்தவர்  கருப்பையா(60). விவசாயி. ராமநாதபுரத்தை சேர்ந்த  கருப்பையா மகன் பிரபா(32). இதேபகுதியை சேர்ந்த வையாபுரி மகன் சுப்பிரமணி(47). இவர்கள் மூன்றுபேரும் ஒரே பைக்கில் கே.புதுப்பட்டியில் இருந்து வாளரமாணிக்கத்திற்கு  சென்றனர். பைக்கை பிரபா ஓட்டினார். ஏத்தநாடு அருகே சென்றபோது. ஆவுடையார்கோயிலில் இருந்து  கே.புதுப்பட்டிக்கு சரக்கு ஏற்ற வந்த மினி வேன் (டாடாஏஸ்) பைக்மீது பயங்கரமாக மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

அதில் படுகாயமடைந்த கருப்பையா, பிரபா ஆகியோர்  பரிதாபமாக இறந்தனர்.  சுப்பிரமணியன் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து சரக்கு லாரி டிரைவர் ஆவுடையார் கோயில் விளானூரைச்சேர்ந்த.  முருகன் மகன் அஜீத் (28) என்பவரை கைது செய்து  விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!