திருச்சி மலைக்கோட்டை நடு தையல்கார தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (54)காண்ட்ராக்டர். இவரது மகன் அருண் ( 17). 11ம் வகுப்பு படித்து வந்தார்.பீமநகர் பகுதியை சேர்ந்த முகமது யாசிம் (16). நண்பர்கள் ஆன இன்று (24 ந்தேதி) காலை டூவிலரில் கோர்ட்டு பின்புறம் அண்ணாநகரில் இருந்து எம்.ஜி.ஆர் சிலை சாலை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதினர். இதில் பலத்த காயமடைந்தனர். இதை கண்ட அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருண் பரிதாபமாக உயிரிழந்தார். முகமது யாசிம் அங்கு சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

