Skip to content

வருங்கால தமிழகத்தை வழி நடத்தும் வல்லமை உதயநிதிக்கே- பொன்முடி

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை வளாகத்தில், 3000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைப்பதற்கு மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தலங்கள் அமைக்க 4 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி, “நேற்றைய தினம் திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்றது. லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். அது தமிழ்நாடு முழுவதும் அல்ல, வடக்கு மண்டலத்திற்கு மட்டுமே நடைபெற்ற நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்றார். வருங்கால தமிழகத்தை வழிநடத்த எங்கள் ஆற்றல் மிக இளைஞர் அணி தலைவர் உதயநிதியே என்பதை திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநாடு நிரூபித்துள்ளது” என்றார்.

error: Content is protected !!