Skip to content

உளுந்தூர் பேட்டை தம்பதி, மகன் மர்ம மரணம்- போலீஸ் விசாரணை

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தின் 3 பேர்  மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். தந்தையின் உடல் மரத்தில் தொங்கியபடி காணப்பட்டது. தாய் மற்றும் மகன்  உடல்கள் அஜீஸ் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள குளம் ஒன்றில் மிதந்தன.

அவர்கள் 3 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இந்த மரணத்துக்கான காரணம்  என்ன? என்பது பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  உளுந்தூர்பேட்டையில் தம்பதி  மற்றும் மகன் என 3 பேர் மர்ம மரணம் அடைந்தது அந்த பகுதியில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!