Skip to content

திருச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறும் இடங்கள்

  • by Authour

‘உங்களுடன் ஸ்டாலின்”- திட்டம்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 15.07.2025 அன்று துவைக்கி வைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக 15.07.2025 முதல் 14.08.2025 வரை 120 முகாம்கள் நடைபெற உள்ளது.

மீதமுள்ள பகுதிகளுக்கு முகாம்கள் 14.11.2025 க்குள் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் விபரம் ஏற்கனவே பத்திரிகைளில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்களின் விபரம் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி முகாம்களில் பொதுமக்கள் கொடுக்க வேண்டிய படிவங்கள் மற்றும் அரத்துறைகள் வழங்கும் பல்வேறு சேவைகள் குறித்த

விளக்க பிரசுரங்கள் ஆகியவை இதற்கென நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள் வாயிலாக அந்தந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு வீடு வீடாக நேரடியாக விநியோகிக்கப்பட்டுவருகிறது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளைத் தேடி வரும் தன்னார்வலர்கள் வழங்கும் மேற்படி விண்ணப்ப படிவங்களைப் பெற்று, அவற்றை பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு, தேவையான ஆவணங்களை இணைத்து முகாம் தினத்தன்று, முகாம்கள் நடைபெறும் இடத்திற்கு சென்று மேற்படி விண்ணப்பங்களை அளித்து அரசின் பல்வேறு சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த முகாம்கள் காலை 9 மணியிலிருந்து மதியம் 3 மணிவரை நடைபெறும். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் .வே.சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!