திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட ராவுத்தான் மேடு சமுதாய கூடத்தில்நடந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார்.
துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 16 மற்றும் 17 வது வார்டு பெல் நகர், இந்திரா நகர், கலைஞர் நகர் ,பரக்கத் நகர், தேசிய தொழில்நுட்பக் கல்லூரி குடியிருப்பு மற்றும் ராவுத்தான் மேடு பகுதி மக்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்பகுதியில் வசித்து வருகின்றனர் . இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ராவுத்தான் மேடு பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் உங்களுடன்
ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
முகம்முக்கு நகராட்சி தலைவர் காயம்பூ தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட டி.ஆர்.ஓ ராஜலட்சுமி, திருச்சி மாவட்ட ஆர்.டி.ஓ அருள், நகராட்சி ஆணையர் பட்டுசாமி,திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடக்கி வைத்து இலவச வீட்டு மனை பட்டா நான்கு பேருக்கு வழங்கினார்
மேலும் முகாமில் கலந்து கொண்ட துறைகளையும் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து
பெறப்படும் மனுக்கள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் கேட்டறிந்தார்.இந்த முகாமில் அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.