திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட மற்ற பள்ளி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. நல்லதம்பி தொடங்கி வைத்தார். பின்னர் எம்.எல்.ஏ. நல்லதம்பி கூறும்போது, உங்களுடன் ஸ்டாலின் முகாமை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்டதாகும் .
இங்கு மனு அளித்த அனைவருக்கும் 30 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும். அதற்கான பணிகளை அதிகாரிகள் விரைந்து செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு எம்.எல்.ஏ கூறினார். பின்பு முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை. ரேஷன் கார்டு ,இலவசம் வீட்டுமனை பட்டா, அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் தேவைப்படும் அனைவரும் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு மற்றபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பூபதி தலைமை தாங்கினார் .கந்திலி சேர்மன் திருமதி திருமுருகன் ,துணை சேர்மன் மோகன். கந்திலி ஒன்றிய செயலாளர். குணசேகரன் முருகேசன் . மோகன்ராஜ் ,மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன். ஊர் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.