நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதனிடையே, ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், 2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பஜெட்டை தாக்கல் செய்தார். பொதுவாக ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றம் விடுமுறை தினமாகும். ஆனால் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) பட்ஜெட் தாக்கல் என்பதால் நாடாளுமன்றம் செயல்பட்டு வருகிறது. 27 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, இந்திய பொருளாதாரம் சீரான வேகத்தில் முன்னேறி வருவதாக கூறிய மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி
செமிகண்டக்டர்
- செமிகண்டக்டர் உற்பத்திக்கு 2.0 திட்டம் அறிமுகப்படுத்தப்படும். செமி கண்டக்டர் துறையை ஊக்குவிக்க ரூ.40,000 கோடி ஒதுக்கீடு
- பிரத்யேக ரசாயன பூங்காக்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்படும்.
- அரியவகை கனிமம் எடுப்பதற்கான புதிய வழித்தட திட்டம் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, கேரளாவுக்கு அறிமுகம்.
- விளையாட்டு உபகரணங்கள் உற்பத்திக்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
‘மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ்’ - நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய தொழில் வழித்தடங்கள் அமைக்கப்படும்.
- காதி, கைத்தறி, கைவினைப் பொருட்களை வலுப்படுத்த ‘மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்.
- மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்கா அமைக்கப்படும்.
- பயோ பார்மா எனப்படும் உயிரி மருத்துவ திட்டங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு
- சிறு, குறு தொழில்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு
- சர்வதேச கடல் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களுக்கு இறக்குமதி வரி கிடையாது
*சர்வதேச அளவில் ஜவுளித்துறையில் இந்தியா போட்டிபோட புதிய திட்டங்கள் - ஜவுளித்துறை சார்ந்த திறன்களை வளர்த்தெடுக்க, தொழிற்துறை, கல்வித்துறை இடையே ஒருங்கிணைப்பு
- இயற்கை நூல் உற்பத்திக்கு புதிய திட்டம்; பருத்தி, பட்டு கம்பளி நூல் உற்பத்திக்கு திட்டம்
- புதிய மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்
7 நகரங்களில் அதிவேக ரயில் தடங்கள்
நகரங்களை இணைக்கும் வளர்ச்சி வழித்தடங்களாக 7 அதிவேக ரயில் பாதைகள் உருவாக்கப்படும் என அறிவிப்பு
மும்பை – புனே
புனே ஐதராபாத்
ஐதராபாத் – பெங்களூரு
ஐதராபாத் சென்னை
சென்னை பெங்களூரு
புதுடெல்லி – வாரணாசி
வாரணாசி சிலிகுரி - முக்கிய நகரங்களில் தலா ரூ.5,000 கோடி முதலீட்டில் நகர்ப்புற பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.
- புதிய தேசிய நீர்வழித்தடங்கள் உருவாக்கப்படும்; இதற்காக ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு
- கோவில் நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மாணவிகளுக்கான விடுதிகள் - உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருந்துகள் ஆராய்ச்சி மையம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அமைக்கப்படும்
- 3 புதிய ஆயுர்வேத கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும்
- வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்
- மாவட்டந்தோறும் மாணவிகளுக்கான விடுதிகள் அமைக்கப்படும்.
- இந்தியவில் அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள். 10 சதவீதம் ஆக உள்ள முதலீடு வரம்பு, 24 சதவீதம் ஆக அதிகரிக்கப்படுகிறது.
பொதிகை மலை
- தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும்
- பழவேற்காட்டில் பறவைகளை கண்காணிக்க 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்
- பொதிகை மலையில் சுற்றுச்சுழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். மேலும் இமாச்சல், ஜம்மு காஷ்மீரில் டிரக்கிங் சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
- கடலோர பகுதிகளில் தேங்காய் சாகுபடியை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். தென்னை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் பட்டுப்போன தென்னை மரங்களை நீக்கி புதிய மரங்கள் நட திட்டம்
- உலகத்தரம் வாய்ந்த ஆன்மிகச் சுற்றுலா உள்கட்டமைப்பு மற்றும் தியான மையங்கள் அமைக்கப்படும்
வருமான வரி சட்டம் - மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு 41 சதவீதமாகவே தொடரும்.
- மாநிலங்களுக்கான நிதிப்பகிர்விற்கு ரூ.1.4 லட்சம் கோடி விடுவிக்கப்படும்.
- ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வருகிறது.
- திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய டிசம்பரிலிருந்து மார்ச் வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது.
- வருமான வரி தாக்கல் செய்யும்போது பொய் கணக்கு காட்டினாலோ, தவறான தரவுகள் வழங்கினாலோ 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்
- வருமான வரி தாக்கல் தொடர்பான சிறிய குற்றங்களுக்கு கிரிமினல் வழக்கு கிடையாது.
- வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்து வரி குறைப்பு
- தனிநபர் வருமான வரியில் இந்த ஆண்டு எந்த மாற்றமும் இல்லை.
- மோட்டார் வாகன விபத்துகளுக்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைகளுக்கு வருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது.
- காலணிகள் ஏற்றுமதி செய்வோருக்கு மூலப்பொருட்களை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய சலுகை.
- Animation, VFX, Gaming Comics (AVGC)
AVGC Content Creator Lab-கள், 15,000 பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் அமைக்கப்படும் - புற்றுநோய் மருந்துகளுக்கான இறக்குமதி வரி குறைப்பு. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 17 மருந்துகளுக்கு சுங்க வரி நீக்கம்.
- கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கான ஆதார வரி (TCS), 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும்.
- மருத்துவக் கல்விக் கடனுக்கான வரி 5 சதவீததில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- DATA CENTRE டெவலப்பர் நிறுவனங்களுக்கு 2047ம் ஆண்டு வரை வரி விடுமுறை (TAX HOLIDAY) அளிக்கப்படும்.
- மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். லித்தியம் பேட்டரிக்கு இறக்குமதி வரி இல்லை.
பங்குச் சந்தை
பங்குச் சந்தையில் நிலவும் அதிகப்படியான ஊக வணிகத்தைக் (Speculative Trading) கட்டுப்படுத்தும் நோக்கில், பியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) மீதான வரிகள் உயர்த்தப்படுகிறது.
Futures மீதான வரி 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாகவும், Options பிரீமியம் மீதான வரி 0.1 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
5.1,40,000 का - 2025-ஆம் ஆண்டுக்குள் நிதிப் பற்றாக்குறை 4.5-க்கும் கீழ் குறைக்கப்பட்டது.
- 2026-27-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் நிதிப் பற்றாக்குறை 4.3 ஆக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
- 2026-27 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ஏற்படும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ.16.7 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- நிதிக்குழு பரிந்துரையின்படி மாநிலங்களுக்கு ரூ.1,40,000 கோடி நிதி வழங்கப்படும்.
(மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை 41 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. நிதிப் பகிர்வு விகிதம் 41 சதவீதமாக தொடரும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.)
இவ்வாறாக சுமார் ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் பட்ஜெட் உரையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வாசித்தார்.

