Skip to content

மத்திய மண்டல புதிய ஐஜியாக வே. பாலகிருஷ்ணன் பொறுப்பேற்பு

தமிழக காவல்துறையின் மத்திய மண்டலத் தலைவராக (ஐஜி) வே. பாலகிருஷ்ணன் இன்று (வெள்ளிக்கிழமை) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழக அரசால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றத்தைத் தொடர்ந்து, மத்திய மண்டல ஐஜியாக வே. பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், திருச்சியில் உள்ள மத்திய மண்டல காவல்துறை அலுவலகத்திற்கு இன்று காலை வருகை தந்த அவர், அலுவலகக் கோப்பில் கையெழுத்திட்டு தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

error: Content is protected !!