Skip to content

திமுக உறுப்பினர் சேர்க்கை .. VSB அட்வைஸ்

  • by Authour

கரூர் கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான எம்எல்ஏ செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அறிவுரையின்படி புதிய உறுப்பினர்களின் சேர்க்கை விரைவில் துவங்க உள்ளது. முதல்வர் உறுப்பினர் சேர்க்கையினை துவக்கி வைத்தவுடன் கரூர் மாவட்டத்திலும் வீடு வீடாக சென்று நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட வேண்டும்.  இந்த உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக செயல்பட்ட மாவட்டமாக கரூர் இருந்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்,

நிகழ்ச்சி மாவட்ட திமுக அவைத் தலைவர் ராஜேந்திரன், உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி, செயலாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், சட்டத்துறை இணைச் செயலாளர் மணிராஜ், நெசவாளர் அணி செயலாளர் பழனி மணி, குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமி சுந்தரி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் முரளி, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைச்செயலாளர் முனைவர் ஜான், துணைச் செயலாளர் பல்லவி ராஜா, தொழிலாளர் அணி மற்றும் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் மாநில, மாவட்ட, தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மாவட்ட அனைத்து அமைப்பாளர்கள், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!