Skip to content

வால்பாறை அருகே..சுற்றுலா பயணி வாகனத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்..

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதிக்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்து செய்கின்றனர்.

குறிப்பாக வால்பாறை பகுதியில் இருந்து 80 கிலோ மீட்டர் வனப்பகுதியில் செல்ல சுற்றுலா பயணிகள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்த நிலையில் மழுக்கபாறை அதிரப்பள்ளி சாலையில் அடிக்கடி காட்டு யானைகள் நடமாட்டம் இருக்கும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அப்பகுதியில் வாகனங்கள் செல்ல கேரளா வனத்துறையினர் அனுமதித்து உள்ளனர் .

வனவிலங்குகள் பகல் நேரத்தில் சாலையில் நடந்து வாகனங்களை அச்சுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் நேற்று மாலை அங்கமாலி பகுதியில் இருந்து வால்பாறைக்கு இரண்டு கார்களில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

அவர் வன பகுதியில் வாட்ச் மரம் என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் வந்த ஒரு கார் பழுதாகி நின்றது அதை சரி செய்வதற்காக மற்றொரு காரில் ஏறி சாலக்குடி பகுதிக்கு சென்று மெக்கானிக் அழைத்து வந்துள்ளனர்.

கார் நிறுத்தி வைத்த இடத்தில் வந்து பார்க்கும் பொழுது சுமார் ஐந்து யானைகளின் கூட்டம் காரை உடைத்து சேதப்படுத்தி காரை தலைகீழாக புரட்டி காரை உடைத்து சேதப்படுத்தியது.

இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து சென்றனர் பின்பு வனத்துறையினருக்கு தகவல் அளித்து வனத்துறையினர் அப்பகுதியில் விரைந்து வந்து யானைகளை விரட்டி காரை எடுத்துச் சென்றனர் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் வாகன நெரிசலும் வாகனங்கள் பழுதாகி வருகிறது வாகனங்களை வனப்பகுதியில் விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

error: Content is protected !!