Skip to content

வைகோ மீது வழக்குபதிவு செய்யகோரி… செய்தியாளர்கள் சங்கம் எஸ்பியிடம் புகார்..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனியார் மண்டபத்தில் மதிமுகவின் நெல்லை மண்டல செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ முன்னிலையில் நடைபெற்றது. நெல்லை மண்டலத்தில் உள்ள தூத்துக்குடி குமரி தென்காசி உள்ளிட்ட சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வைகோ பேசிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த காலி நாற்காலிகளை செய்தியாளர்கள் வீடியோ எடுக்கும் பொழுது மதிமுக நிர்வாகிகள் எடுக்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் மதிமுகவினர் செய்தியாளர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று  எஸ்பியிடம் விருதுநகர் மாவட்ட ஊடக மற்றும் செய்தியாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் புகார் மனு அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது..

சாத்தூரில் நேற்று 09-07-2025 அன்று மாலை 5 மணியளவில்

ம.தி.மு.க கட்சியின் நெல்லை மண்டல செயல்வீரர்கள் கூட்டம் வெங்கடேஷ்வரா பேலஸ் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சாத்தூர் எம்.எல்.ஏ ரகுராமனின் உதவியாளர் சுணெஷ்குமார் மற்றும் நகர செயலாளர் மற்றொரு கணேஷ்குமார் ஆகியோரின் தொலை பேசி அழைப்பின் பேரில் செய்தி சேகரிப்பிற்கு செய்தியாளர்கள் சென்றனர். அப்போது மதிமுக கட்சி பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக செய்தியாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது கட்சியினர் திரு. வைகோவின் பேச்சை கேட்காமல் கூட்டத்திலிருந்து மண்டபத்தை விட்டு வெளியேறிச் சென்று கொண்டிருந்தனர். இதனைக் கவனித்த திரு. வைகோ வெளியேறிச் சென்றவர்களை ஆவேசத்துடன் உள்ளே வந்து அமருங்கள் அல்லது வீட்டுக்குச் செல்லுங்கள் என்று மைக்கில் உரக்க கோவத்துடன் கத்தினார். இந்நிகழ்வை செய்தியாளர்கள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்த செய்தியாளர்களை பார்த்து ” காலி சேர்களை காலிப்பசங்கதான் படம் பிடிப்பாங்க. உனக்கு அறிவிருக்கா. கேமராவை பிடிங்கி பிலிம் ரோலை தூக்கி எறிங்க” என்று ஆவேசத்துடனும் ஆத்திரத்துடனும் கத்தியதை தொடர்ந்து அடையாளம் தெரியாத 10க்கும் மேற்பட்ட மதிமுக கட்சியினர் மற்றும் நிர்வாகிகளவர்களைச் சூழ்ந்து கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.அவர்களது கேமராவை பிடிங்கி உடைக்க முற்பட்டுள்ளனர். கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு நாக்கியுள்ளனர். உடனே அங்கிருந்த போலீசார் பாதிக்கப்பட்ட செய்தியாளர்களை மீட்டு மண்டபத்திற்கு வெளியே விட்டுள்ளனர். இவை அனைத்தும் அங்கிருந்த மற்ற செய்தியாளர்களால் படம் பிடிக்கப்பட்டு, முன்னனி தொலைக்காட்சிகளில் செய்தியாக வெளிவந்துள்ளது. இச்சம்பவத்தில் விருதுநகர் மாவட்ட பாலிமர் செய்தியாளர் மணிவண்ணன் படுகாயமுற்று சாத்தூர் மருத்துவமனையிலும், விருதுநகர் மாவட்ட தமிழ் ஜனனம் செய்தியாளர் ஜெயராம் சாத்தூர் அரசு மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இரண்டு செய்தியாளர்கள் லேசான காயத்திற்காக புற நோயாளியாக சிகிச்சை பெற்றனர். மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ தூண்டுதலின்பேரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களின் பணியினை செய்ய விடாமல் தடுத்து கொலை வெறி தாக்குதல் நடத்த காரணமாயிருந்த வைகோ மீதும், தாக்குதல் நடத்திய மதிமுகவினர் மீதும் வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று இவ்வாறு தெரிவித்துள்ளானர்.

 

error: Content is protected !!