கோவை மாவட்டம், வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது காட்டு யானை கூட்டங்கள் அதிக அளவில் தனியார் எஸ்டேட் மற்றும் சாலை ஓரங்களில் தென்படுகிறது. இந்நிலையில் வனத்துறை உயர் அதிகாரிகள் பெயரில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுழற்சி முறையில் பணியாற்றி ஸ்டேட்ட தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர் இதை அடுத்து பெரியார் புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட சாலக்குடி ஆகும், கேரளா அரசு பேருந்து வால்பாறை வந்து திரும்பி செல்லும் பொழுது சாலக்குடி அருகே உள்ள அதிரப்பள்ளி பால்ஸ் பகுதிகளில் காட்டு யானை கூட்டங்கள் அரசு பஸ் வழி மறித்ததால் ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்து பின்புறம் இயக்கி பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது தகவல் அறிந்து வந்த கேரளா வனத்துறையினர் காட்டு யானை கூட்டத்தை அடர் வனபகுக்கு விரட்டினர், மேலும் கேரளா வனத்துறையினர் கூறுகையில் தற்போது சாலக்குடி சாலையில் அதிக அளவில் காட்டி யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமட்டும் உள்ளது பகல் நேரங்களில் வரும் சுற்றுலா பயணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர் எனவும் காட்டு யானைகள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது தவிர்க்க வேண்டும் அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வால்பாறை- அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானைகள்…பரபரப்பு
- by Authour
