Skip to content

வால்பாறை- சாலையில் காட்டு யானைகள்-பொதுமக்கள்-பயணிகள் அச்சம்

ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட சிறுகுன்றா பகுதியில் சாலையைக் கடந்த யானைகளால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்தை வழிமறித்ததால் ஓட்டுநர் மற்றும் பயணிகள் அச்சத்தில் பயணித்தனர்.

இந்நிலையில் வால்பாறை பகுதியில் யானைகளின் வரவு அதிகரிப்பால் பகல் நேரங்களில் பிரதான சாலைகளில் உலா வருகிறது. மேலும் வால்பாறை பகுதியில் சிறுத்தை கரடி யானைகளால் உயிர் சேதங்கள் அதிக அளவில் ஏற்படுவதால் தற்போது வன உயிரின கூடுதல்

வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் கடந்த 15 ஆம் தேதி நகராட்சியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் வனவிலங்குகளை கட்டுப்படுத்தும் வகையில் தனியார் வேலைத் தொட்ட அதிபர்களுடன் அரசுக்கு எடுத்துரைத்து தீவிர நடவடிக்கை எடுக்க முயற்சி செய்துள்ளது.

மேலும் வால்பாறை பகுதியில் தற்போது யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பகல் இரவு நேரங்களில் யானைகள் அடிக்கடி உலா வருகிறது எனவே அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் முக்கியமாக சுற்றுலாப் பயணிகள் சாலையை கடக்கும் போதும் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

error: Content is protected !!