Skip to content

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து – 10க்கும் மேற்பட்டோர் காயம்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டிராவல்ஸ் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருக்கும் போது, முன்னால் சென்ற லாரியை முந்துகையில் லேசாக உரசவே, கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையின் நடுவே கவிழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்துக்குள்ளான வேனில் 15 நபர்கள் பயணம் செய்ததாகவும், அதில் 6 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனிடையே விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், சாலையின் நடுவே கவிழ்ந்த வேனை மீட்புக்குழுவினர் கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர். வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது வேன் விபத்துக்குள்ளாகி 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!