மணல் கடத்தலை தடுத்த தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் வெட்டி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், துறையின் பணியினை செய்த கிராம நிர்வாக அலுவலருக்கு உரிய பாதுகாப்பை வழங்காத தூத்துக்குடி மாவட்ட
நிர்வாகத்தை கண்டித்தும், சுகாதார துறையை போல் வருவாய் துறைக்கும் உரிய அரசு பணியாளர் மற்றும் பணியிட பாதுகாப்பை வழங்க அரசானை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டமைப்பு )
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கம், கிராம நிர்வாக அலுவலர் சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம், கிராம உதவியாளர்கள் சங்கம், நில ஆவணத்துறை அலுவலர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் நாகமணிகண்டன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.