Skip to content

திருவண்ணாமலையில் 14 கி.மீ கிரிவலம் சென்ற வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2026 இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்ததுடன், மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையையும் கைப்பற்றி சாதனை படைத்தது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். குறிப்பாக வருண் சக்ரவர்த்தி விளையாடிய 9 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர் என்ற பெருமையையும் ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில் தொடர் முடிந்து சொந்த ஊர் திரும்பிய இருவரும், திருவண்ணாமலைக்கு நேற்றிரவு வருகை தந்தனர். அதன்படி இருவரும் அண்ணாமலையாரை தரிசித்து, சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனர். தரிசனத்தை முடித்த கையோடு, அவர்கள் இருவரும் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலைப்பாதையில் கிரிவலமும் சென்றனர்.

அப்போது கிரிக்கெட் வீரர்களை கண்ட பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர்.

error: Content is protected !!