தங்க மதிப்பீட்டாளரிடம் ரூ 21 கிராம் தங்க நகைகள் திருட்டு
குன்றத்தூரை சேர்ந்தவர் திலகம் ( 63). இவர் தங்க மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் திருச்சி வந்த அவர் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்ல முடிவு செய்து பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தார்.அப்பொழுது அவர் சிறுநீர் கழிக்க கழிவறைக்கு செல்ல முடிவு செய்து தான் வைத்திருந்த பேகை பஸ்சின் சீட்டில் வைத்துவிட்டு சிறுநீர் கழிக்க கழிவறை சென்று உள்ளார். பிறகு மீண்டும் வந்து பார்த்துக் போது சீட்டில் இருந்த பேக் காணவில்லை.
அந்த பேகில் 21 கிராம் தங்க நகை வைக்கப்பட்டு இருந்தது.இதனை பார்த்து அதிர்ச்சிடைந்த திலகம் உடனடியாக அங்குள்ள காவல் உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திலகத்திடம் விசாரணை நடத்தினார்கள்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த வாலிபர் திலகம் பேக்கில் இருந்த 21 கிதங்க நகையை திருடியத்தை
ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து விட்டு அன்வர்ரை கைது செய்து அவரிடமிருந்து 21கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
தங்கும் விடுதியில் சமையல் பாத்திரங்கள் திருட்டு
திருச்சி தென்னூர் மிலாது நகரை சேர்ந்தவர் பீர் இம்ரான் கான் (வயது 41) இவர் உறையூர் நவாப் தோட்டம் பகுதியில் தங்கும் விடுதி வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 10ந் தேதி விடுதியில் மூன்றாவது மாடியில் உள்ள சமையலறை கதவு திறந்து இருந்தது. இதனை கீழ் இருந்து நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் 3 பேரும் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று மாடி படிக்கட்டுகள் ஏறி சமையலறைக்கு சென்று அங்கு உள்ள சமையல் பாத்திரங்களை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து பீர் இம்ரான் கான் உறையூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போது கரூர் மாவட்டம் குளித்தலை சேர்ந்த பிரபாகரன் ( 23) நவாப் தோட்ட பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 40) துறையூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (43) பேர் ஆகிய மூன்று பேர் சேர்ந்து தங்கு விடுதியில் உள்ள சமையல் பாத்திரங்களை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட சமையல் பாத்திரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
வீட்டின்பூட்டை உடைத்து வெள்ளி சாமி சிலைகள் திருட்டு
திருச்சி திருவெறும்பூர் திருவேங்கடம் நகரை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 51)இவருடைய உறவினர் வீடு தில்லைநகர் மூன்றாவது கிராசில் உள்ளது. இந்நிலையில் அவர் வீட்டை பூட்டி விட்டு அமெரிக்கா சென்று விட்டார்.வீட்டின் சாவியை சுதர்சன்யிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். இந்த நிலையில் கடந்த 11ந்தேதி வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து சாமி அறையில் இருந்த வெள்ளி விநாயகர், லட்சுமி சிலைகள் மற்றும் வெள்ளி நாணயம் ஐயப்பன் டாலர் போன்றவற்றை திருடி சென்று விட்டனர்.வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக சுதர்சனுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சுதர்சன் தில்லைநகர் வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது வீட்டில் இருந்த வெள்ளிப் பொருட்கள் திருட்டுப் போய் இருப்பது கண்டு அதிர்ச்சிடைந்தார். இந்த சம்பவம் குறித்து சுதர்சன் தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்தார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி முத்தரசநல்லூர்ரை சேர்ந்த விஜயராஜ் (வயது 19 )மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.இதில் சிறுவனை திருச்சி கூர்நோக்கில் இல்லத்தில் ஒப்படைத்தனர்.
முதியவர் சட லம்..
திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் சுமார் 64 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவ குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
போதை மாத்திரை விற்று 3 பேர் கைது….
திருச்சி உறையூர் செல்லாயி மேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கு விடுதி அருகில் போதை மாத்திரை விற்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உறையூர் போலீஸ் சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தபோது அங்கு மூன்று பேர்
போதை மாத்திரை மற்றும் ஊசிகள் வைத்திருந்தனர். இதனை பார்த்த போலீசார் மூன்று பேரையும் பிடித்து விசாரணை செய்த போது உறையூர் பகுதியை சேர்ந்த பரணி குமார் (வயது 26) மணிகண்டன் (வயது 32) முகேந்திரன் (வயது 28 )ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.