தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க, தமிழ்நாடு அரசு தேடுதல் குழுவை அறிவித்துள்ளது. இதன்படி சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், முன்னாள் துணைவேந்தர்கள் பேராசிரியர் சச்சிதானந்தம், பேராசிரியர் விஜயகுமார் ஆகியோரைக் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோல தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமனம் செய்ய ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கே.பி.கே. வாசுகி தலைமையில் 5 பேர் கொண்ட தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தீனபந்து, முது முனைவர்கள் செல்வம், தங்கராசு, ராஜேந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.