LPG தட்டுப்பாட்டால் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, புதுவை உள்ளிட்ட நகரங்களில் பல ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன. கேஸ் தட்டுப்பாட்டால் கள்ளச்சந்தையில் ரூ.500 கூடுதலாக விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே, சென்னையில் காய்கறிகள் விலை தலைகீழாக குறைந்துள்ளது. தக்காளி கிலோ ₹10, பெரிய வெங்காயம் ₹10- ₹20, சுரைக்காய்- ₹10, முள்ளங்கி ₹10, கேரட்- ₹20, சின்ன வெங்காயம் ₹20- ₹30-க்கு விற்பனையாகிறது.

